பக்கம்:வைணமும் தமிழும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

வைணவமும் தமிழும்


என்ற பாசுரத்தில் தன் பதற்ற நிலையைப் புலப்படுத்துகின்றாள்.

தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தலைவி தாயாரையும் தோழியையும் வேண்டு கின்றாள் பரகால நாயகி (திருமங்கையாழ்வார்).

          தவளஇ ளம்பிறை துள்ளும்முந்நீர்த்
          தண்மலர்த் தென்றலோடு, அன்றில்ஒன்றி;
          துவளஎன் நெஞ்சகம், சோரஈரும்;
          சூழ்பனி நான்துயி லாதிருப்பேன்;
          இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்;
          என்நலம் ஐந்துமுன் கொண்டுபோன
          குவளை மலர்நிற வண்ணர்மன்னு
          குறுங்குடிக் கேஎன்னை உய்த்திடுமின்
- பெரி. திரு.951

[தவள-வெண்ணிறமான முந்நீர்-கடல்]

இப்பாசுரத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் பாசுரங்களிலும் ஆழ்வார்நாயகியின் சித்தோபாய ஊற்றத்தைக் காணலாம்.

2. 'சாத்யோபாயம்' என்பது நம்மால் மேற்கொள்ளப் பெறும் உபாயமாகும். இது பக்தி என்றும், பிரபத்தி என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும்.

(i) பக்திநெறி : பேரன்பின் முதர்ச்சியே பக்தி என்பது, பக்தியை மேற்கொண்டார் பக்தர். பத்தர் எனப்படுவர். பத்தரெனினும் பித்தர் எனினும் ஒன்றேயாகும். உலகில் நோயால் கொள்ளும் பித்தும், மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா