பக்கம்:வைணமும் தமிழும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

வைணவமும் தமிழும்


இதில் நுவலப்பெற்றுள்ள எட்டு அங்கங்கள்: (1) இயமம் என்பது அகிம்சை,சத்தியம், திருடாமை, காமத்தை அ! -க்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (2) நியமம் என்பது தூய்மை, உள்ளதைக்கொண்டு மனநிறைவு பெறுதல், வேதாந்த பரிசயம் செய்தல், எல்லாச் செயல்களையும் இறைவனிடம் சமர்ப்பித்தல்; (3) ஆசனம் என்பது, பதுமாசனம் முதலிய ஆசனங்கள் (4) பிராணாயாமம் என்பது, மூச்சை அடக்குதல் (5) பிரத்தியாகாரம் என்பது புலன்களை உலக விஷயங்களின்றும் திருப்புதல், (5) தாரணை என்பது, பகவா னுடைய திருமேனியை மனத்திற்கொள்ளுதல்; (7) தியானம் என்பது, இடைவிடாது இறைவனை நினைத்தல்; (8) சமாதி என்பது, இறைவனை நேரிற் கண்டாற்போன்ற அடைதல். இந்த எட்டு அங்கங்களையுடைய பக்திநெறிவழி ஒழுகுவார்க்குப் பிராட்டியாருக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான்.

இந்தப் பக்திநெறி ஆழ்வார் பாசுரங்களில் ஆங்காங்கு குறிப்பிடப்பெற்றுள்ளன. நாலாயிரத்தை ஒதுவார் இதனை நன்கு அறிவர்.

          அறிந்துஐந்தும் உள்ளடக்கி,
              ஆய்மலர் கொண்(டு),ஆர்வம்
          செறிந்த மனத்தராய்ச்
              செவ்வே -அறிந்து அவன்தன்
          பேர்ஒதி ஏத்தும்
              பெருந்தவத்தோர் காண்பரே
          கார்ஒத வண்ணன்
              கழல். (இரண், திருவந்6)