பக்கம்:வைணமும் தமிழும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

269


வேண்டியதாகும் என்பதை அறிதல் வேண்டும். இந்த அவா படிப்படியாக வளர்ந்து பேருருவம் கொள்வதை அவர்தம் பாசுரங்களால் (திருவாசிரியம் 2; பெரிய திருவந், 8; திருவாய். 73:6,83:4:8103.2.10.10:10) அறிகின்றோம்.இந்நிலையில் ஆன்மா தியானத்தில் அழுந்துகின்றது. இந்த உயர் நிலையில் எல்லா உயிர்களிடையேயும் ஊடுருவி நிற்கும் பரமான்மாவின் சாயல் தோன்றுகின்றது. இது திடீரென்று தோன்றி மறையும் நிலையாகும்.

(இ).பக்தியோகம்: ஞானயோகத்துக்கு அடுத்த நிலையே பக்தியோகம் என்பது. இந்த நிலையிலும் தியான நிலை உண்டு இந்த தியான நிலையில்தான் ஆன்மா தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினை அறிகின்றது. இது ஞானநிலையின் இறுதிப்படியும் பக்தி நிலையின் முதற்ப்டியும் ஆகும்.

          உய்த்துணர்வு என்னும்
              ஒளிகொள் விளக்கேற்றி
          வைத்து அவனை
              நாடி வலைப்படுத்தேன்
முன்-திருவந்94)

என்ற பேயாழ்வாரின் பாசுரத்தில் இந்த நிலையினை அறியலாம். ஞானமே பக்தி நிலையாக முதிர்கின்றது. இதுவே “ஞானம் கனிந்த நலம்" (இராமாநு. நூற்.66) என்று அமுதனார் குறிப்பிடுவது. இந்த நிலையில் முமுட்சுகள் தம் முனைப்பை அகற்றி இறைவனுடைய சங்கற்பத்துக்கு அடிபணிந்து இறைவனுடன் நிரந்தரத்தொடர்பு கொள்வதற்குத் தயாரா கின்றனர். இந்த நிலையில்தான் தமக்கும் இறைவனுக்கும் அறுபடாத தைலதாரைபோன்ற தொடர்பு ஏற்படுகின்றது. நாளாக நாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல்