பக்கம்:வைணமும் தமிழும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

வைணவமும் தமிழும்


ஆன்றோ இவர்? ஒவ்வொரு திருவந்தாதியிலும் முதற் பாசுரத்தின் உள்ளீடான பொருளை ஆதாரமாகக் கொண்டு பூருவர்கள் சுவையாக நிர்வகித்தமை இது ‘எம்பெருமானை உபய விபூதிக்கும் உரியவன் என்றார் பொய்கையார், அவன் ‘நாராயண' ஒலியின்பொருள் என்றார் பூதத்தார்: நாராயன ஒலியுடன் ‘திரு’ (g) என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றார் பேயார்”

இங்ஙனம் ஒவ்வொரு ஆழ்வார் செய்த உதவியை வேதாந்த தேசிகர்,

          பாட்டுக்கு உரிய பழைய
          மூவரைப் பண்டொருகால்
          மாட்டுக்கு அருள்தரும் மாயன்
          மலிந்து வருத்துதலால்
          நாட்டுக்கு இருள்செக நான்மறை
          அந்தி நடைவிளங்க
          வீட்டுக்கு இடைக்கழிக் கேவெளி
          காட்டும் மெய்விளக்கே7

     [பழையவர்-முதலாழ்வார்கள் மாடு-செல்வம்: மலிந்து
     அதிகமாக; நாடு - உலகம் இருள்-அஞ்ஞானம்; வீடு -
     திருக்கோவலூரில் உள்ள வீடு, மெய்விளக்கு மூன்று
     அந்தாதிகள்]

என்று சிறப்பித்துப் பேசுவர். எம்பெருமான் முதலாழ்வார் களைக்கொண்டு மூன்று திருவந்தாதிகளைப் பாடுவித்து உலகிலுள்ள அஞ்ஞான இருளைப் போக்கிப் பக்தி, பிரபத்திகளாகின்ற உபாயங்களை வெளியிட்டு உலகினை


7. தே.பி.-89