பக்கம்:வைணமும் தமிழும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. நலம் அந்தம்
இல்லதோர் நாடு

‘முத்திநிலை' அல்லது ‘வீடுபேறு' பற்றிச் சமய நூல்கள் பலபடியாகப் பேசும். வைணவம் இதனைப் புருஷார்த்தம்’ என்று குறிப்பிடும். வைணவசமயக் கருத்தின்படி வீடு ஒருதனி உலகம். இதனை நம்மாழ்வார்,

          புலனைந்தும் மேயும்
              பொறி ஐந்தும் நீங்கி
          நலம்அந்தம் இல்லதோர்
              நாடு புகுவீர்! (திருவாய் 2.8:4)

என்று குறிப்பிட்டு அவ்வுலகத்திற்குச் செல்லுமாறு ஆற்றுப் படுத்துவர். இங்கு 'நலம் அந்தம் இல்லதோர் நாடு’ என்பதில் 'அந்தம் இல்லது' என்பதை நலம் நாடு என்ற இரண்டிற்கும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அந்தம் இல்லதோர் நாடு அழிவில்லாத ஒப்பற்ற நாடு நலம் அந்தம் இல்லதோர் நாடு - அழிவில்லாத இன்பத்தையுடைய நாடு. நாடும் அழிவில்லாதது; அதனை அடைந்தார்க்கு உண்ட ாகும் இன்பமும் அழிவில்லாதது என்பது அறியத் தக்கது.

நம்மாழ்வாரைப் பின்பற்றியே பரிமேலழகரும் தமது திருக்குறள் உரையில் பலவிடங்களில் வீட்டினை 'அந்தமில்


1. புருஷன்-ஆன்மா, அர்த்தம்-பொருள்; அஃதாவது ஆன்மா அடையவேண்டிய பொருள்.