பக்கம்:வைணமும் தமிழும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

வைணவமும் தமிழும்


(3.8:11)"பொன்னுலகு” (7:1) என்றெல்லாம் தம் திருவாய். மொழியில் குறிப்பிட்டுள்ளமையையும் காணலாம்.

ஆழ்வார் பெருமக்கள் 'வீடு’ என்பதைப்பற்றிக் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம். இந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மா கதிரவன் மண்டலத்தைப் பிளந்து கொண்டு அவ்வழியே சென்று பரமபதம் என்னும் நாட்டை அடைவதாகும், ஆங்கே ஆராஅமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தைவிட்டு ஒரு நாளும் திரும்பி வருவதில்லையாகவும் அதுவே வைகுந்தம் என்பதாகவும் திருமங்கையாழ்வார் குறிப்பிடுவர்.

          தேர்ஆர் நிறைகதிரோன்
              மண்டலத்தைக் கீண்டுபுக்கு
          ஆரா அமுதம்
              அங்குஎய்தி - அதினின்றும்
          வாராது ஒழிவது
             ஒன்று உண்டே?
(சி. திருமடல் கண் 7,8)

என்ற அவரது சிறிய மடல் கண்ணிகளால் இஃது அறியப்பெறும். மேலும் அவர்,

          மன்னும் கடுங்கதிரோன்
              மண்டலத்தின் நன்னடுவுள்
          அன்னதோர் இல்லியின்
              ஊடுபோய்- வீடென்னும்
          தொன்னெறிக்கண் சென்றாரைச்
             சொல்லுமின்கள்
(பெ.திரு மடல் கண் 1617)

(இல்லி-துவாரம்)

3. வீடு-விடுதலை பெற்ற நிலை; அதனையுடைய இடம். 4. இதனால்தான் மீளா உலகம் என்றுபெயர் பெற்றது.