பக்கம்:வைணமும் தமிழும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

287


என்று பெரிய திருமடலிலும் வற்புறுத்துவர். திருமழிசை யாழ்வாரும்,

          சண்ட மண்டலத்தி னுாடு
              சென்று வீடு பெற்றுமேல்
          கண்டு வீடு இலாத காதல்
              இன்பம் நாளும் எய்துவீர்!
(திருச்சந்த-67)
     [சண்ட மண்டலம் சூரிய மண்டலம்]

என்று கூறுவர்.

          இருள் அகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு
              ஏற்றிவைத்து ஏணி வாங்கி
          அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்
-பெரியாழ் திரு.49:3

என்று இவ்வீட்டைக் காட்டுவர் பெரியாழ்வார். வீட்டுல கைப்பற்றி ஆழ்வார்களின் கருத்துகள் யாவும் உபநிடதக் கருத்து களுடனும் வைணவ ஆகமக் கருத்துகளுடனும் ஒத்துள்ளமை கருதத் தக்கது.மேலே ஏறுவதற்குச் சாதனமாக இருப்பது ஏணி; இங்கு எம்பெருமான் உபாயகமாக இருப்பதைக் காட்டுகின்றது. 'பரமபதம்' ஏறுமளவும் எம்பெருமான் உபாயமாக இருப்பான்; அதன்பிறகு உபேயமாகி விடுகின்றான் என்பது அறியப்படும். ஆன்மா வீட்டுலகம் செல்லும் நெறியை வைணவ சமயம் 'அர்ச்சிராதிமார்க்கம்' என்று குறிப்பிடும். முத்தியை அடையும் ஆன்மா உடலைவிடும்போது சுழுமுனை (சுஷ முனை) என்றை நாடி வழியாய் வெளிக்கிளம்பி மோட்சத்திற்குப் போகும் வழியாகும் இது. அர்ச்சிஸ் முதலான தேவதைகளைக் கொண்டிருக்கும் வழி என்பது இதன் சொற்பொருள். அர்ச்சிஸ் என்பது அங்கியங்கடவுள்; நெருப்புக்கு இறை