பக்கம்:வைணமும் தமிழும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

வைணவமும் தமிழும்


1. வேதாந்த தேசிகரின் விளக்கம் : ஆழ்வார் பாசுரங்களிலும் உபநிடதங்களிலும் ஆழங்கால் பட்ட வேதாந்த தேசிகர் இதனைத் தெளிவாக விளக்குவர். மோட்சத்தை அடையும் ஆன்மா இவ்வுடலைவிட்டு வெளியேறி சூக்கும உடலுடன் செல்லுங்கால் அக்கினி தேவதை பகலின் தேவதை சுக்கில பட்சதேவதை, உத்தராயணதேவதை, வர்ஷ(மழை) தேவதை, வாயுதேவதை, கதிரவன், திங்கள், மின்னலின் தேவதைகள், வருணன், இந்திரன் பிரசாபதி என்ற தேவதைகள் வழிகாட்டி நடத்திச் செல்லுங்கால், தான் மேற்கொண்ட் வினையின் பலனாகவும் கடைப்பிடித்த வழியின் மகிமையாலும் சில இன்பங்களைப் பெற்று இறுதியில் வைகுந்தத்தை அடையும். அங்கு ஆன்மாஇடைவிடாது இறையநுபவத்தைப் பெற்று அதிலேயே மண்டிக் கிடக்கும் (தே.பி. 67,68)

2. திருநாடு செல்லும் ஆன்மா : திருநாட்டிற்குச் செல்லும் ஆன்மாவுக்கு நடைபெறும் பணிவிடைகளையும் மரியாதைகளையும் சூழ் விசும்பு அணி முகில்” (திருவாய் 109) என்ற திருவாய்மொழியில் பரக்கப் பேசுகின்றார் ஆழ்வார். தமக்குக் கிடைக்கப்போகும் பேற்றை கற்பனையில் கண்டு பேசுகின்றார். r

நாரணன் தமரைக் கண்டு உகந்து மேகங்கள் மங்கல வாத்திய ஒலிபோல் முழங்கும்; ஆழ்கடல்கள் ஏழும் திரைகளாகிய கைகளை எடுத்துக் கூத்தர்டும். ஏழு த்வீபங்களும் மாமலைகளை ஏந்தி நிற்கும் (1),

மேகங்கள் விசும்பில் பூரண கும்பங்களாக அமையும். கடல்களும் நிரந்தரமாக ஆர்த்து நிற்கும். அந்தந்த உலகிலுள்