பக்கம்:வைணமும் தமிழும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

289


ளார் பெரிய மலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தித் தாங்களும் தொழுவர் (2).

அர்ச்சிராதிகள் எனப்படும் ஆதிவாஹிகள் கைபடைத்த பயன் பெற்றோமென்று பூமாரி பொழிந்து தொழுது நிற்பர்; து.ாபத்தையும் காட்டுவர். ஆங்காங்குள்ள முனிவர்களும் மெளனவிரதத்தைத் தவிர்த்து, இங்கே எழுந்தருள வேண்டும்; “இங்கே எழுந்தருள வேண்டும்’ என்று நல்வரவு கூறி உபசரிப்பர் வைகுந்தத்திற்கு இதுவே வழி என்று இருபக்கமும் நின்று கொண்டு இசைப்பர் (3)

தேவர்கள் பூமியை அளந்தவன் தமர் செல்லுகின்ற வழிகளிலெல்லாம் தோப்புகளைச் சமைத்துத் தங்கும் இடங்களை ஏற்படுத்துவர்; அதிர்குரல் முரசங்கள் எங்கும் ஒலிக்குமாறு செய்வர் (4)

வருணன், இந்திரன், பிரசாபதி ஆகிய தேவர்கள் 'போதுமின், எமதிடம் புகுமின்’ என்று வேண்டுவர். இந்நிலையில் கின்னரர்களும் கருடர்களும் கீதங்கள்பாடுவர். மேலுலக வைதிகர்கள் தாங்கள் புரிந்த தேவபூசைகளின் பலன்களைக் காணிக்கையாக்குவர் (5)

இந்நிலையில் விரைகமழ் நறும்புகை எம்மருங்கும் பரவும். திருச்சின்னங்களும் சங்குகளும் எம்மருங்கும் ஒலிக்கும். ஒளி மிக்க நயனங்களையுடைய தேவமாதர்கள் ஆழியான் தமரை நோக்கி 'வானகம் ஆள்மின்கள்’ என்று குளிர நோக்கி அன்புடன் வாழ்த்துவர். இப்பாசுரத்தில் ‘வாளொண்கண் மடந்தையர்' என்ற தொடரிலுள்ள அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை 'தேசாந்தரத்தில் நின்றும் போந்த பிரஜையை