பக்கம்:வைணமும் தமிழும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

வைணவமும் தமிழும்


வைகுண்ட நாதனுக்கு உருவம் உண்டு. அது திவ்விய மங்கள விக்கிரகம் எனப்படும்.

          கண்கள் சிவந்து பெரியவாய்
              வாயும் சிவந்து கனிந்துள்ளே
          வெண்பல் இலகுசுடர், இலகு
              மகர குண்டலத்தன்;
          கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
              நான்கு தோளன், குனிசார்ங்கன்
          ஒண்சங்கு கதைவாள் ஆழியான்
              ஒருவன் ... (திருவாய் 8.8:1)
     [கனிந்து பழுத்து: உள்ளே அகவாயிலே இலகுவிளங்குகின்ற;
     இலகுவிலகு - மிக விளங்கி அசைகின்ற; கொண்டல் -
     மேகம்; குனி - வளைந்த]

என்ற நம்மாழ்வார் பாசுரப் பகுதியில் இந்தத் திருமேனி காட்டப்பெறுகின்றது. வேதாந்த தேசிகரின் 'தயாசதகத்தில்' இந்த எம்பெருமானின் திருக்கோலம் நன்கு காட்டப் பெறுகின்றது. இடக்கால் தொங்கிய நிலையிலும், வலக்கால் மடிந்த நிலையிலும் இருக்கும். வலக்கை வலது முழங்காலிலும், இடக்கை அனந்தாழ்வான் உடலில் தாங்கிய படியும் இருக்கும் பின்புறத்திலுள்ள இரண்டு கைகளில் திருவாழியும் திருசங்கும் பொலிவு பெறும்.

6. பரமபதத்தில் சீவன்நிலை : முத்தி நிலையிலுள்ள சீவான்மாவுக்குப் பசி, நீர் வேட்கை முதலியன இல்லை. பாவம், முதுமை, துன்பம், இறப்பு முதலியவை அவனை நெருங்கா - முத்தி அடைந்த சீவனின் நிலையை ஆறு உவமைகளால்