பக்கம்:வைணமும் தமிழும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. சம்பிரதாயங்களாக-சில

ஒவ்வொரு சமயத்தினரும் சம்பிரதாயமாகச் சிலவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். இவையே நாளடைவில் சமயப் பண்பாடுகளாக அமைந்து விடுகின்றன. வாழ்க்கையோடு ஒட்டிப் பிரிக்க முடியாதபடி அமைந்து விடுவன் அனைத்தும் பண்பாடுகளாம். வைணவ சமயத்தில் அமைந்த அத்தகைய சிலவற்றை ஈண்டு நோக்குவோம்; எடுத்துக் காட்டுவோம்.

1. சம்பிரதாயப் பெயர்கள் : வைணவ உரைகளில் அதாவது வியாக்கியானங்களில் - சில பெரியோர்களின் இயற்பெயர்கள் சம்பிரதாயமாக மாறி வழங்கப்பெற்றுள்ளன. இதனை வைணவரல்லாதாரும் - ஏன்? பெரும்பாலான வைணவர்களும் கூடத்தான்-அறிந்திருக்கவேண்டும்.அதுமன் ‘சிறிய திருவடி என்றும், கருடன் பெரியதிருவடி என்றும், ஆதிசேடன் அனந்தாழ்வான் என்றும், இலக்குவன் ‘இளைய பெருமாள்’ என்றும், இராமன் பெருமாள்” என்றும், அரங்கநாதன் பெரிய பெருமாள்’ என்றும், சுக்கிரீவன் ‘மகாராசர்’ என்றும், ஜடாயு பெரிய உடையார் என்றும், திருமலை திருமலையாழ்வார் என்றும், ஆழ்வார்திருநகரியின் திருக்கோயிலிலுள்ள புளியமரம் - உறங்காப்புளி - திருப்புளி


1. சம்பிரதாயம் : தாயம்-தானம்; கொடை. பிரதாயம்-முதன்மையான கொடை சம்பிரதாயம்- சிறந்த முதன்மையான கொடை. சிறந்த முதன்மையான உபதேசத்தைக் குறித்தது. வழிவழியாகக் கடைபிடிக்கப்படுவது. இஃது ஒருவகை நெறியாயிற்று.