பக்கம்:வைணமும் தமிழும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

வைணவமும் தமிழும்


யாழ்வார்' என்றும், ஆளவந்தார் பெரிய முதலியார் என்றும் சம்பிரதாயப் பெயர்களுடன் வைணவர்களின் திருவுள்ளத்தில் இடம் பெறுவர். இங்ஙனமே கூரத்தாழ்வான் ஆழ்வான் என்றும் கிடாம்பி ஆச்சான் 'ஆச்சான்' என்றும், திருக்குருகைப் பிரான் பிள்ளான் பிள்ளான்” என்றும், குருகைக் காவலப்பன் ‘அப்பன்’ என்றும், பெரியவாச்சான்பிள்ளை ஆச்சான் பிள்ளை’ என்றும், முதலியாண்டான் ‘ஆண்டான் என்றும், சுருக்கமான பெயர்களால் வழங்கப்பெறுவர். தமிழ் அறிஞர் உள்ளத்தில் உ.வே.சாமிநாத அய்யர் ‘அய்யர்வாள்’ என்றும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிள்ளை அவர்கள் என்றும், பன்மொழி புலவர் வேங்கடராஜூலு ரெட்டியார் ‘ரெட்டியார் என்றும், தியாகராசச் செட்டியார் செட்டியார் என்றும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், திரு.வி.க என்றும் டாக்டர் மு.வரதராசன், மு.வ.என்றும் வழங்க வில்லையா? அதுபோல என்க,

2. திருமேனிகள் : ஈசுவரன், சடகோபன், உடையவர் (இராமாநுசர்) இவர்களின் திருமேனிகளைப் பற்றி சம்பிரதாயமாக வழங்கி வரும் மரபுகள் உள்ளன. .

(அ). ஈசுவரன் திருமேனி: கருடனுடைய உடலாய் நிற்கும் வேதத்தின் பொருளாய் நிற்பவன்.இவனது திருமேனியில் சீவான்மா இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்துவ மாகவும், மூலப்பிரகிருதி ஸ்ரீவத்சம் என்னும் மறுவாகவும், ‘மான்' என்னும் தத்துவம் கெளமோதகி என்னும் கதையாகவும், - ஞானம் நந்தகம் என்னும் வாளாகவும், மருள் (அஞ்ஞானம்) வாளின்உறையாகவும், தாமசாகங்காரம் சார்ங்கம் என்னும் . வில்லாகவும், சாத்விகாகங்காரம் பாஞ்சசன்னியம் என்னும்