பக்கம்:வைணமும் தமிழும்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

299


சங்காகவும், மனம் சுதர்சனம் என்னும் சக்கரமாகவும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பத்தும் அம்புகளாகவும், தந்மாத்திரங்கள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகிய இருவித பூதங்களின் வரிசையும் வைஜயந்தி என்னும் வனமாலையாகவும் இங்ஙனம் எல்லாத் தத்துவங் களும் எம்பெருமானுக்கு ஆயுதமாகவும், ஆபரணமாகவும் இருப்பதாகக் கருதுவது வைணவமரபு2. அதாவது எம் பெருமான் சேதநம், அசேதநம் என்னும் தத்துவங்கள் அனைத் தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டுள்ளான் என்பது கருத்து.

எம்பெருமானுடைய ஆபரணங்கள் ‘திவ்வியாபரன ஆழ்வார்கள்' என்னும் திருநாமத்தால் வழங்கப்பெறும். உலகிலுள்ள மற்ற ஆபரணங்களுக்கில்லாத மென்மை,மணம், அழகு, ஒளி முதலியன இவ்வாபரணங்களுக்கு உண்டு சங்கு சக்கரம் ஆபரணங்கள் பகவானை வெறுத்து நிற்பவர்கட்கு ஆயுதங்களாகவும், விரும்பி நிற்பவர்கட்கு ஆபரணங்களாகவும் தோன்றும். ஆபரணங்களுக்கு எங்ஙனம் தோற்றம், அழிவு முதலிய குற்றங்கள் இல்லையோ, அங்ஙனமே ஆயுதங்களுக்கும் இவை இல்லை. நித்தியசூரிகளே திவ்வியாபரண ஆழ்வார்கள், திவ்வியாயுத ஆழ்வார்கள் எனப் பெயர் பெற்றுள்ளனர். இவை பகவானுடைய ஆயுதங்கள் என்னும் நிலைக்கேற்ப ஞானம், சக்தி முதலிய திருக்குணங்களைப் பெற்றுள்ளன.

(ஆ).சடகோபனின்திருமேனி: ஆழ்வார்கள் பன்னிருவருள் சடகோபர் நம்மவர் என்று போற்றத்தக்க பெருமைவாய்ந்து 'நம்மாழ்வார்' என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப்


2. தே.பி. 80