பக்கம்:வைணமும் தமிழும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

309


இங்ஙனம் பல உவமப் பொருத்தங்களைக் கண்டு கொள்ளலாம்.

(ஆ) நீர் : 'நீரகத்தாய்’ என்று எம்பெருமானைக் கூவி அழைக்கின்றார் கலியன் (திருநெடுந் 8), நீரின் இயல்பை உடையவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல் பற்றி இத்தலத்திற்கு ‘நீரகம்’ என்று திருநாமமாயிற்று. இவ்விடத்து எம்பெருமானை 'நீரகத்தாய்’ என விளிக்கின்றார்.

நீர்க்கும் எம் பெருமானுக்கும் இயல்பாக உள்ள ஒற்றுமைகள்;

(i) நீர்பள்ளத்தில் பாயும்; மேட்டில் ஏறுவது அருமை.எம் பெருமானும் சாதி முதலியவற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவான்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான்.பாண்டவர்க்காக துரது சென்ற போது ஞானத்தால் சிறந்தோம்’ என்றிருக்கும். வீடுமரையும், ‘குலத்தால் சிறந்தோம்' என்றிருக்கும் துரோண ரையும் செல்வத்தால் சிறந்தோம்’ என்றிருக்கும் துரியோதன னையும் ஒருபொருளாக மதியாமல் இவை எல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதியிருந்த விதுரனுடைய திருமாளிகையிலே தானாகச் சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான்.ஆகவே, பள்ளத்தே ஒடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.

(ii) நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது. 'நீரின்றி அமையாது உலகம்' (குறள்- 10) என்பது வள்ளுவர் வாக்கு. எம்பெருமான் இன்றி ஒரு காரியமும் ஆகாது. 'அவன் அன்றி


9. இது காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஒரு சிறு கோயில் (108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று).