பக்கம்:வைணமும் தமிழும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

311

(vii). அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய்கனி கிழங்கு வேர் பலா முதலிய வற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதியொன்றையும் சகிக்கமாட்டாது:நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாதுசந்தானத்தாலும் போதுபோக்குதல் அரிது. “ஒருநாள் காண வாராயே!” (திருவாய் 851),"அடியேன் தொழ வந்தருளே’ (மேலது 5.7:6) என்று பிரார்த்தித்துப் பெற்றே தீரவேண்டும்.

(viii). Gaero, உண்ணும்போது நீர் இல்லாமல் முடியாது; அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்: எம்பெருமான் இவற்றை விரும்பாதவன். “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” (திருவாய். 583)

(ix) கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர்தான குறைய நில்லாது;எங்கும் நிரம்பியிருக்கும். எம்பெருமானும் “கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் என் வள்ளல்” (திருவாய், 3.9:5). கொள்வார் குறையே யத்தனை. ஐசுவரியமே போதும் என்பாரும், கைவல்யமே போதும் என்பாருமாக குறையக் கொள்வார் குற்றமேயாகும்.

(x), நீர் ஐவகைப்பட்டிருத்தல் போல எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன், எங்கனமென்னில்: (அ) பூமிக்கடியில் பதிந்து கிடக்கும் நீர் (ஆ) ஆவரனநீர் (இ) பாற்கடல்நீர், (ஈ) பெருக்காற்று நீர் (உ) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என எம்பெருமானுடைய நிலைமைகளும் ஐவகைப்பட்டிருக்கும்.