பக்கம்:வைணமும் தமிழும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

வைணவமும் தமிழும்


(xi). நீரானது பரிசுத்தமானதாயும் தான் இருக்கும் இடத்திற்குத்தக்கதாய்க்கொள்ளத்தக்கதாயும் விடத்தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் விடத்தக்கவனாகவும், கூராழி வெண் சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.

(xii). நீர்தோண்டத்தோண்டச்சுரக்கும்;"தொட்டனைத்து ஊறும் (குறள்-395) எம்பெருமானும் “கொள்ள மாளாஇன்ப வெள்ளம் கோதில தந்திடும்” (திருவாய் 47:2)

(xiii), நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சார்ந்தவையும்அவனை அடைந்தவர்க்காகவே இருக்கும்.

(xiv). நீர் தானாகப் பெய்ய வேண்டுமேயன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாதது. எம்பெருமான் இயல்பும் அப்படியே. - -

(xiv). நீர் கடலிலிருந்து காளமேகம்வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன்படுத்துவதாகாது. எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அை டயத் தக்கவனாகின்றான். -

(xvi). வசிட்ட சண்டாள வேறுபாடின்றியே அனைவரும் ஒர் துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம் பெருமானும் “நிகரில் அமரர்முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!” (திருவாய் 610:10) என்றும், “கானமும் வானரமும் வேடுமுடைவேங்கடம்” (நான்,திருவந்47) என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்றும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பான்.

(xvii). நீர் சிறிதுதுவாரம் இருப்பினும் உள் புகுந்துவிடும்; எம் பெருமானுக்குச் சிறிய வியாஜமே போதும், “திருமாலிருஞ்