பக்கம்:வைணமும் தமிழும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

315


பெருமான், வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான், சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமானிடம் சில தர்ம சூக்குமங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.

(iv). பெய்யப்பெறாத காலத்திலே வறக்கும் மேகம்; நெஞ்சுலர்ந்து பேசினானன்றோஎம்பெருமானும், திரெளபதிக்கு ஆபத்திலே அருகேயிருந்து உதவப் பெறாத குறைக்காக,

(v). இன்னகாலத்திலே மேகம் பெய்யுமென்று அறுதி யிடவல்லார் எவரும் இலர் பெய்ய வேண்டிய காலத்திலே பெய்யாதொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே “வந்தாய் போல வாராதாய்! வாராதாய்போல் வருவானே" (திருவாய். 610:9). திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகம் காட்டாதொழிந்தான் விரும்புதலை எதிர்பாராமல் “தாவியன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்” (திருமாலை-35).

(vi). ‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்ய வேண்டும்’ (இரண் திருவந் 16) என்று வளைப்பிட வொண்ணாது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே” பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் “எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப; விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருளை யீந்தவனன்றோ?" (திருமாலை - 44)

(vii), ஜலஸ்தான விபாகமின்றியே பெய்யும் மேகம், வேடன், வேடுவிச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,