பக்கம்:வைணமும் தமிழும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

வைணவமும் தமிழும்


வேண்டினவிடத்தும் தன் மனோரதம் பெறாமலே மீண்டான் அன்றோ?

(ஈ). இரத்தினம்: 'மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை' (பெரிதிரு. 89;)என்பது மங்கைமன்னனின் வாக்கு மை மை நிறம் மானம் மணி - பெரு விலை பெறும் நீல இரத்தினம்; மரகதம்-பச்சைமணி. “எய்ப்பினில் வைப்பினைக்; காசினை மணியை” (பெரி. திரு. 710:4) என்பது மங்கை மன்னனின் திருமொழி. இரத்தினத்திற்கும் எம்பெருமானுக்கும் பல நிலைகளில் ஒப்புமை உண்டு. -

(i). இரத்தினத்தைச் சொந்தமாகவும் அநுபவிக்கலாம்; விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம். அப்படியே “எம்பெருமானை புருஷார்த்தமாகவும்” கொள்ள லாம்.அவனை உபாயமாக்கி ஐசுவாரிய கைவல்யார்த்திகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்”

(ii). இரத்தினத்தை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன். மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன், உத்தம் அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலனிந்து அநுபவித்து மகிழ்வன். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐசுவரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோட்சோபாயமாக்கிக்கொண்டு மோட்ச புருஷார்த்தத்தைக் கொள்வாரும் அவனை எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே" என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.

(iii), இரத்தினத்தை இழந்தவன் கதறியழுவான்; எம் பெருமானை இழந்தவனும் அப்படியே இராமரத்தினத்தை


13. புருஷன்-ஆன்மா, அர்த்தம் பொருள். ஆன்மா அடையும் பொருள் வீடுபேறு.