பக்கம்:வைணமும் தமிழும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

வைணவமும் தமிழும்



(ix). இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை, எம்பெரு மானுக்கும் பிராட்டியாரால் ஏற்றம்.

(x). இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும் இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.

(xi). இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.

(xi). இரத்தினம் எவ்வளவு உயர்ந்ததாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும்; எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து செளலப்பியத்தைக் காட்டு கின்றவனன்றே? -

(xii). இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் உறங்கார்; எந்த வேளையில் யார் கொள்ளைகொள்வரோ என்று அஞ்சி இருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே, “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ? கண்கள் துஞ்சுதலே’ (திருவிருத்-97) என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை; கண்ட பின்பும் இல்லை.

இப்படிப் பல உவமப் பொருத்தங்கள்.

(உ). நிதி : வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றி” (திருவாய். 671) என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு

நிதி-தனம் வைத்தமாநிதி - எம்பெருமான். இந்த இரண்டும்பற்றிய சிந்தனையோட்டம். புதைத்து வைக்கப் பெறும் பொருள் நிதி’ எனப்படும். சென்னை போன்ற