பக்கம்:வைணமும் தமிழும்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

321

இடங்களில் வங்கிபோல் செயற்படும் நிறுவனங்கள் நிதி’ என்று பெயரால் வழங்குதல் காண்க. தைத்திரிய உபநிடதத்தில் எம்பெருமான் 'நிதி' எனப்படுவான்.

இரண்டிற்கும் வேற்றுமை : நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி; எம்பெருமானாகின்ற நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கதாக இருக்கும். இந்த வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.

இரண்டிற்கும் ஒற்றுமை: (i) நிதியானது தன்னையடைந் தவர்களை இரவும் பகலும் உறங்கவொட்டாது; எந்த இடத்தில் யார் கொள்ளை கொள்வரோ என்ற அச்சத்தால் துஞ்சா திருப்பர் நிதியுடையோர். எம்பெருமானும் அப்படியே, “கண்ணாரக்கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே’ (திருவிருத்97.காண்பதற்கும் முன்பும் உறக்கம் இல்லை; கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை;

(ii). நிதியானது ‘சித்தாஞ்சனம்' அணிந்த சில பாக்கிய சாலிகட்கே கிடைக்கும். எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’ பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே தென்படுவன.

(iii), நிதியுடையவன் மார்பு நெறிப்பன். எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் எனக்கு ஆரும் நிகரில்லையே’ (இராமா.நூற் 47),”மாறுளதோ இம்மண்ணின் மிசையே?” (திருவாய். 64:9), “இல்லையெனக்ககெதிரில்லையெனக்கெதி ரில்லையெனக் கெதிரே” (பெருந்தொகை-1438) என்று செருக்கிப் பேசுவார்கள்.