பக்கம்:வைணமும் தமிழும்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

325


கோயில் (திருவரங்கம்), பெருமாள்கோயில்(காஞ்சி), திருக்குடந்தை, திருநாராயணபுரம், திருவெவ்வுளுர் (திருவள்ளுர்), திருநின்றவூர் முதலான சந்நிதிகளில் ஆராதனம் பாஞ்சராத்திரம் ஆகமநெறிகளையொட்டி நடைபெறுகின்றது. திருமலை, திருவல்லிக்கேணி, திருமாலிருஞ்சோலைமலை, திருக்கோட்டியூர், திருநீர்மலை முதலான சந்நிதிகளில் வைகானசஆகம நெறிகளையொட்டி ஆராதனம் நடைபெற்று வருகின்றது.இந்தச் சந்நிதிகளில் ஆராதனம் செய்யும் முறையே பாஞ்சராத்திரிகளும் வைகானசர்களும்தான் அதிகாரிகளாவர். ஆனால் பதரிகாசிரமம் ஜகந்நாதம், திருவனந்தபுரம் முதலிய திருத்தலங்களில் ஆக்னேயாகி புராணங்களில் துவலப்பட்டபடி செய்யப்பெறும் ஆராதனமாதலால் எல்லாப் பார்ப்பனர்களும் அதிகாரிகளாக அமைகின்றனர்.

பாஞ்சராத்திரிகளும் வைகானசர்களும் தனித்தனியான குரு பரம்பரையையுடையவர்கள். தத்துவங்களிலும் இருவரிடையேயும் சொல் வேற்றுமை உள்ளது. பாஞ்சராத்திரிகர்கள் வாசுதேவன்,சங்கர்ஷணன் பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு மூர்த்திகளின் விதானமாகவும்; வைகானசர்கள் விஷ்ணு, புருஷன், சத்தியன், அச்சுதன், அநிருத்தன் என்ற ஐந்து மூர்த்திகளின் விதானமாகவும் எம்பெருமானை ஆராதித்து வருகின்றனர். வைகானகர் ஆராதனம் செய்யும் இடங்களில் ஏதாவது காரணங்களால் ஆராதனம் தடைப்பட்டால், எக் காரணத்தைக் கொண்டும் இதரர்கள் அதனைச் செய்தல் கூடாது. வைகானசர்களின் சந்நிதிகளில் ஆராதனம் செய்யும் இடங்களில் திருமேனியை இதரர்கள் தொடுவதையும்கூட அங்கீகரிக்காமல் பிராயச்சித்தமும் செய்வதுண்டு. பாஞ்சராத்