பக்கம்:வைணமும் தமிழும்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

வைணவமும் தமிழும்


திரிகட்கு இந்த ஆட்சேபங்கள் இல்லை. ஆதலால்தான் இராமாநுசர்போன்ற ஆசாரியப் பெருமக்கள் பாஞ்சராத்திர ஆகமத்திற்கு ஏற்றம் கொடுத்தார்கள் என்று கருதலாம்.

வைகானசர்களின் பூசையில் மந்திரோச்சாரணம் முக்கியமாக இருக்கும் என்றும், பாஞ்சராத்திரபூசையில் தந்திரம் முக்கியமாக இருக்கும் என்றும் சொல்லுவார்கள். பாஞ்சராத்திரர்கள் அவசியம் நேர்ந்தால் பிராயச்சித்தத்திற்குப் பதிலாக தீட்சை செய்துகொண்டுதான் செய்வார்களாம். இந்த இரு வகையினரும் திருவிலச்சினை செய்து கொள்வதில்லையாம் தங்களில் பெரியோர்களிடத்தில் தீட்சைபெற்றுக் கோயில்களில் பூசை செய்வர் என்பர். பாஞ்சராத்திரஆகமம், வைகானச ஆகமத்தைப்போலவே பூர்வீகமானதேயாகும். பிரம்மோற்சவத்தில்(பெரிய விழாக்களில்) பாஞ்சராத்திர சந்நிதிகளில் மூன்றாம் நாட்களிலும், வைகானச சந்நிதிகளில் நான்காம் நாட்களிலும் கருடசேவை நடைபெறுவதாகச் சொல்லப் பெறுகின்றது.

2. பஞ்சம்ஸ்காரம் : ஒரு வைணவனுக்கு அகத்துய்மை, புறத்தூய்மை என்ற இருவகை தூய்மையும் இருத்தல்வேண்டும். இவற்றுள் அகத்துய்மையாவது மனத்திலுள்ள காமம் குரோதம் முதலிய அழுக்குகளற்றும் எம்பெருமானிடத்தில் அன்பு பூண்டிருத்தலுமாகும்.புறத்துாய்மையாவது சங்கு சக்கரம் முதலிய இலச்சினைகளைப்பெறுதலாகும்.இந்தப்புறத்துய்மை பஞ்சசம்ஸ்காரத்தில் அடங்கும். இவை தாபம், புண்ட்ரம் நாமம், மந்திரம், யாகம் என்பவையாகும். தாபம் என்பது ஓமத்தீயில் சுடப்பெற்ற சங்கு சக்கரங்களைப் புயங்களின் மேற்பகுதிகளில் தரித்துக்கொள்ளுதல். இங்ஙனம் சங்கு சக்கரங்களைப் பெற்றுக்கொள்வதை,