பக்கம்:வைணமும் தமிழும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

வைணவமும் தமிழும்


பன்னிரண்டு இடங்களில் அதிட்டித்திருந்து அவர்களின் திருமேனியைக் காப்பர்.

(அ) நெற்றியில்-கேசவன்: இவர் தங்கமயமாய் நான்கு புயங்களிலும் நான்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டு சீதேவிப் பிராட்டியாரோடு சேவைசாதியப்பர்.

(ஆ) வயிற்றில்-நாராயணன் : இவர் நீலமேக சாமள வண்ணத்தராய் நான்கு புயங்களிலும் நான்கு சங்கங்களைத் தாங்கிக் கொண்டு அம்ருதோத்பவை பிராட்டியாருடன் சேவை பாவித்தருள்வார்.

இ) மார்பில்-மாதவன் : இவர் இந்திர நீல இரத்தினத் துடன் நான்கு கைகளிலும் நான்கு கதைகளைத் தாங்கிக் கொண்டு கமலைப் பிராட்டியாராடு காத்தருள்வார்.

(ஈ) கண்டத்தில்-கோவிந்தன்: இவர் சந்திரகாந்தி யோடு நான்கு விற்களைத் தாங்கிய வண்ணம் சாதுதேவி (சந்திரகோபிநீ பிராட்டியாருடன் சேவைபாலிப்பார். -

(உ) வலப்புற வயிற்றில் விஷ்ணு : இவர் தாமரைப் பூந்தாதின் நிறத்தோடு நான்கு கைகைளிலும் நான்கு ஹலாயுதங்களைப் (கலப்பை) பிடித்தவராய் விஷ்ணு பத்தினி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார்.

(ஊ) வலப்புறத்தில் - மதுசூதனன் : இவர் தாமரைப் பூ நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு முசலங்களைத் தாங்கிக் கொண்டவராய் வைஷ்ணவி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார்.