பக்கம்:வைணமும் தமிழும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

வைணவமும் தமிழும்


இத்திருமண்காப்பு எல்லா வகுப்பார்க்கும் பொது வானது. இதற்கு நீள அகல உயரம் இடைவெளி முதலிய அளவுகள் உண்டு. இவற்றை ஐந்து விரல்களாலும் தரிக்கலாம். ஒவ்வொரு விரலால் தரிக்கப்பெறுவதற்கும் தனித்தனிப் பலன் சொல்லப் பெற்றுள்ளது.

4. நவிற்றவேண்டியமந்திரங்கள்: இந்தப் பன்னிரண்டு புண்ட்ரங்களை தரிக்கும்போது நாவினால் நவிற்றவேண்டிய மந்திரங்கள் உள்ளன. நெற்றியில் வெள்ளை மண்ணால் புணர்ந்ததைத்தரிக்கும்போது'கேசவாயநம என்றும், வயிற்றில் தரிக்கும்போது நாராயணாய நம: என்றும், மார்பில் தரிக்கும் போது கோவிந்தாயநம : என்றும், வறிற்றின் வலப்பாகத்தில் இடப்படும்போது விஷ்ணுவே நம: என்றும், வலப்புறத்தில் இடப்படும்போது மதுசூதனாயநம என்றும், வலக்கழுத்தில் இடப்பெறும்போது திரிவிக்கிரமாயநம என்றும், வயிற்றின் இடப்பாகத்தில் இடப்படும்போது, வாமனாய நம: என்றும், இடப்புயத்தில் இடுங்கால் சிரீதராநம: என்றும், இடக்கழுத்தில் தரிக்குங்கால் இருடிகேசாயநம என்றும், முதுகின் அடிப்புறத்தில் தரிக்குங்கால் பதுமநாபாயநம என்றும், பிடரியில் இடுங்கால் தாமோதராய நம: என்றும், பதின்மூன்றாவதாகச் சிரசில் இடுங்கால் வாசுதேவாயா நம"; என்றும் சொல்லிக் கொண்டே இடுத்தல்வேண்டும். கேசவாதி நாமங்களைச் சொல்லி இடப்பெறுவதால் திருநாமம் என்று பெயராயிற்று.பெண்கள் பிறைக் கீற்று போல் திருமண் இட்டுக்கொள்ள வேண்டும்.