பக்கம்:வைணமும் தமிழும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

335


(உ) மந்திரபாடிகள் : நினைத்த மாத்திரத்தில் எம்பெருமானின் இணைத்தாமரை அடிகளாகிய பரமபதத்தை நல்கக்கூடிய எட்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது செபித்துக் கொண்டிருப்பவர்கள்.

(ஊ) வைணவர்கள் : சிற்றின்பத்தைத் துச்சமெனக் கருதி எம்பெருமானிடம் ஒன்றையும் விரும்பாமல் அவன் திருவடிகளை அடைவதையே பலனாகக் கருதிப் பக்தியை உபாயமாகக் கொண்டு இருப்பவர்கள்.

(எ) நீவைணவர்கள்: கர்மம், ஞானம், பக்தி முதலான - இதர சாதனங்கள், போகங்கள் யாவற்றையும் துறந்து அதனால் துய மனத்துடன் எம்பெருமானிடம் சாதன அறிவின்றிப் பக்தியுடையவர்களாக இருப்பவர்கள்.

(ஏ) பிரபந்நர்கள் : எல்லாவற்றிலும் வைத்திருக்கின்ற ஆசையாகிய பற்றையறுத்து “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் கண்ணனே” (திருவாய் 671) என்று கொண்டு எல்லாப் பாசங்களையும் அவன் திருவடிகளில் வைத்திருப்பவர்கள் இவர்கள்.

(ஐ) ஏகாந்திகள்: எம்பெருமானை தவிர, இதர தேவதைகளையும் இதர விஷயங்களையும், பக்தியை உபாயமாகக் கருதுவதையும் துறந்து அவன் திருவடிகளையே சாதனமாகக் கருதி “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர்கைம் மாறுநானொன் றிலேன் என தாவியும் உனதே (திருவாய் 5.7:10) என்றவாறு எல்லாப் பாரத்தையும் அவன்மீது போட்டிருப்பவர்கள்.