பக்கம்:வைணமும் தமிழும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

27



மதிப்படைந்து சீவிக்கும்படியாயிருக்குமென்று வைத்துக் கொள்வோம்; அதையும் பொறாதே அப்படிப்பட்ட விசாரிப்பும் செய்யார்கள் என்று 'என்னே என்பாரும் இல்லை’ என்பதற்கு இது சுவைமிக்க பொருள்.

(ஈ) திரிகடுகம் : இந்நூலை இயற்றியவர் நல்லாதனார்.
கண்ணகன் ஞாலம் அளந்ததுஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருதம் சாய்த்ததுஉம்-நண்ணிய
மானச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

இஃது இந்நூல் காப்பாக வந்த பாடல். திருமால் திரிவிக்கிரமனாக ஞாலம் அளந்த வரலாறும், கண்ணனாக அவதரித்தபோது குருந்தம் சாய்த்தது, சகடம் உதைத்தது என்ற இரண்டு நிகழ்ச்சிகளும் இதில் குறிப்பிடப் பெற்றுள்ளன.

(உ) நான்மணிக் கடிகை : இதன் ஆசிரியர் விளம்பி நாயனார் என்ற நல்லிசைப் புலவர்.
மதிமன்னு மாயவன் வான்முகம் ஒக்கும்;
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும்; பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.

இஃது இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல், மாயவன் வியக்கத்தக்க ஆற்றலுடைய திருமால் சக்கரப் படை அவன் திருக்கண்களுக்கும் பூவை மலர் அவன் நிறத்திற்கும் உவமையாக வந்தன.