பக்கம்:வைணமும் தமிழும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

37



மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
நடந்தானைத் துதுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை எத்தாத நாவென்ன நாவே
நாராயணாவென்னா நாவென்ன நாவே.[1]

இப்பாடல்களுள் ஈரடியால் மூவுலகளந்தமை தம்பியொடுகான் போந்தமை, 'சோ' என்னும் அரணம் அழித்தமை உலகனைத்தையும் கொப்பூழில் உதிக்கச் செய்தமை கண்முதல் கனிவாய் ஈராக உள்ள கரியனைக் கண்களால் கண்ட மை, கண்ணனுக்குக் கஞ்சன் இழைத்த வஞ்சனைச் செயல்களை யெல்லாம் கடந்து நின்றமை, பாண்டவர்க்காக நூற்றுவர்பால் தூது சென்றமை ஆகிய செயல்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. திருவனந்தபுரத்து எம்பெருமான் ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் (29:52) என்றும் ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன்(30:51) என்றும் இரண்டு இடங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளான். ஆக சிலப்பதிகாரத்தில் பரதத்துவம், வியூகம், விபவம், அர்ச்சை என்ற திருமாலின் நான்கு வகை நிலைகளும்

குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் ஆய்ச்சியர் குரவையில் கண்ணன் ஆயர்பாடி மகளிருடன் குரவை யாடிய செய்தியையும் காணலாம்.[2] இச்செய்தியில் ஏழு இளம்பெண்கள் தமது மணங்குறித்து வளர்த்த ஏழுவகை ஏற்றினை அடக்கினவனையே மனப்போம் எனக் குறித்து வளர்த்தனர். இம் மகளிரைப் பழைய நரம்புகள்


  1. மேலது ஆய்ச்சியர்குரவை-38,39,40
  2. சிலம்பு -ஆய்ச்சியர் குரவை 13,14, 15,16