பக்கம்:வைணமும் தமிழும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

39



(ஆ) மணிமேகலை : சிலப்பதிகார காலத்துடன் எழுந்தக் காப்பியம் மணிமேகலை, இதிலும் வைணவம்பற்றிய குறிப்பு உள்ளது. மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமயவாதிகளையும் கண்டு அவரவர் சமயப் பொருள்களைக் கேட்க விரும்பினாள். அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரும் தத்தம் சமயக் கருத்துகளை உரைத்தனர். வைணவவாதி கூறுவான்;

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஒதினன் நாரணன் காப்பென்று கூரைத்தனன்.[1]

என்று ஈண்டுக் கடல்வண்ணன் புராணம் என்பது விட்டுணு புராணத்தை. புராணம் - பழைமையான வரலாறு; இவன் வைணவ சமயத்தில் பேரன்பும் கடைப்பிடியும் உடையவனாதலால் 'காதல் கொண்டு ஒதினான்’ என்றார். 'நாராயணன் முறை செய்தலேயன்றிக் காத்தலும் அவன் கடன்' என்று வற்புறுத்தினான். ‘ஆதிபகவன் முதற்றே உலகு' என்று வள்ளுவர் இறைவனைச் சுருங்கக் கூறியதுபோல் 'நாரணன் காப்பு' என்று சுருக்கமாக உரைத்தனன்.

இ) சீவகசிந்தாமணி : இந்நூல் சீவகன் என்னும் ஒரரசன் பிறந்தது முதல் வீடுபேறு அடையும் வரை உள்ள கதையைக் கூறுவது திருத்தக்க தேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப்பெற்றது. பிற்காலத்தில் அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகாகவிகள் பலர்க்கும் வழிகாட்டிய இனிய காவியம். அந்தக் காலத்தில் திருமால்பற்றியும் அவரது அவதாரங்கள் பற்றியுமான செய்திகள் மக்களிடையே பெரு


  1. மணிமேகலை-சமயக்குரவர் தம் திறம் கேட்ட காதை.