பக்கம்:வைணமும் தமிழும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை
டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

இணைப்பேராசிரியர், வைணவத் துறை,

சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 600 005

வைணவம் என்பது மிகமிகத் தொன்மையான மதம். வடமொழியிலமைந்த வேதங்களிலும் மிகமிகத் தொன்மையான தமிழ்நூலான தொல்காப்பியம் முதலான நூல்களிலும் வைணவம் தொடர்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

வைணவத்தைப் பற்றியும் அதன் தத்துவக் கொள்கை களைப் பற்றியும் பண்டைக் காலத்திலிருந்தே ஆயிரக் கணக்கான நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. வைணவ ஆசார்யர்கள் அருளியுள்ள நூல்களை அடிப்படையாகக் கொண்டோ, அல்லது அந்நூல்களுக்கு விளக்கங்களாகவோ பல்லாயிரக்கணக்கான நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும் வைணவம்பற்றிய செய்திகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பதற்கு ஏற்ப முழுநூல் ஒன்று இதுவரை இல்லாமலே இருந்தது. அக்குறையை அருங்கலைக்கோன், பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் “வைணவமும் தமிழும்” என்ற இந்நூல் மூலம் தீர்த்துவிட்டார் என்றே கூறலாம்.

அறிவாலும் அகவையாலும் முதிர்ந்தவர். ஏறக்குறைய நூறு நூல்களுக்குமேல் எழுதியவர் என்பது போன்ற பல பெருமைகளைப் பெற்ற ரெட்டியாரவர்கள் ஏற்கெனவே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் “வைணவச் செல்வம்”

iv