பக்கம்:வைணமும் தமிழும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வைணவமும் தமிழும்



மண்டலித்து அமையவில்லை. ‘திருவிருத்தம்’, ‘சிறிய திருமடல்’, 'பெரிய திருமடல்' ஆகிய மூன்றும் அகத்துறைப் பிரபந்தங்களாகும். இம்மூன்றனுள் மடல்கள் இரண்டும் கலிவெண்பாவாலான பிரபந்தங்களாகும்.

(3) பிரபந்தங்களின் தொகை :

நாலாயிரத்திலுள்ள பிரபந்தங்களின் தொகையும் பாசுரங்களின் தொகையும் வேதாந்த தேசிகர் காலத்தில் வரையறுத்துக் கூறப்பெற்றவை. தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை. அது பெரியாழ்வார் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தை அப்படியே கொண்டவர்.

ஏரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு வாயே[1]

என்று திருப்பல்லாண்டு சேர்ந்த ஒரே தொகையாகக் கூறியிருப்பதனால் இதனைஅறியலாம். அவர் தமது பிரபந்த சாரத்தில் மேற்கொண்டுள்ள முறையைக் கவனித்தால் இது தெளிவாகும். இந்த முறை பிரபந்தசாரத்தின் முதற்பாட்டில்,

வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின்
வகையான தொகைஇலக்கம் மற்றும் எல்லாம்[2]

என்று பேசப்பெறுகின்றது. இதில் 'பாட்டின் வகையான தொகை' என்பது 'பாட்டின் வகுப்பின்படி எண்கள்' என்பதையும் 'இலக்கம்’ என்பது அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின் கூட்டிய எண் என்பதையும் குறிக்கின்றன என்பது


  1. பிரபந்தசாரம்-9 (தே.பி.375)
  2. பிரபந்தசாரம்-1 (தே.பி. 367)