பக்கம்:வைணமும் தமிழும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ற இரு நூல் தொகுதிகளை வெளியிட்டிருந்தாலும் தற்போது வெளிவரும் “வைணமும் தமிழும்” என்ற இந்நூல் மிக எளிய நடையில் வைணவத்தின் கூறுகள் அனைத்தையும் விளக்கும் வகையில் பதினாறு இயல்களாக அமைந்துள்ளது.

“வைணவமும் தமிழும்” என்ற தலைப்பில் இந்நூலில் அமைந்துள்ள முதல் இயலில் தொல்காப்பியம் முதல் பற்பல பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வைணவம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் ஒருங்கே எடுத்துக் காட்டப் பெறுகின்றன. திருக்குறள் வைணவத்தையே பகருகின்றது என்று ஆசிரியர் அகச்சான்றுகளுடன் நிலை நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள “ஆதிபகவன்” “இறைவன்” முதலிய சொற்கள் நாராயணனையே குறிக்கும் என்று ஆசிரியர் விளக்கியுள்ள விதம் மிகவும் நயமாகவும் பாராட்டத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.

‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்ற தலைப்புள்ள இரண்டாம் இயலில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் அமைந்துள்ள பிரபந்தங்கள் குறித்த விவரங்கள் தரப் பட்டுள்ளன. ஆனால் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் அமைந்துள்ள முதல் பிரபந்தமான திருப்பல்லாண்டைத் தனி பிரபந்தமாகக் கொள்ளாமல் பெரியாழ்வார் திருமொழியின் ஒரு பகுதியாகவே கணக்கிட்டிருப்பதை ஏற்க முடியவில்லை. இது குறித்து ஶ்ரீ உ.வே. மஹாவித்வான் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமிகள் ஏற்கெனவே பல கட்டுரைகளை எழுதித் தெளிவு பிறப்பித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் திருமொழியில் முதல் பத்தில் ஒன்பது

v