பக்கம்:வைணமும் தமிழும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வைணவமும் தமிழும்



முதலாயிரம் 947
பெரிய திருமொழி 1134
திருவாய் மொழி 1102
இயற்பா 593
மொத்தம் 3776

என்றவாறு அமைகின்றது. அஃதாவது இரு மடல்களையும் நீக்கினால் இத்தொகை3774 என்றாகின்றது. இத்தொகை நாலாயிரத்திற்கு (4000-3774) 226 குறைகின்றது. வேதாந்த தேசிகர் தாம் இயற்றிய பிரபந்தசாரத்தில் இருமடல்களையும் 118 பாசுரங்களாகக் கொள்வர்.

சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும்[1]

என்பது அவரது திருவாக்கு பிறிதோரிடத்தில் அவர்

அஹீதனுயர் பரகாலன் சொல் . . . . . . . . . .
வேங்கட மாற்கு ஆயிரத்தோடு
ஆணஇரு நூற்றோரைம் பத்து முன்று[2]

என்று திருமங்கை மன்னன் பாசுரங்களை 1253 என்று பேசுவர். மடல் ஒழிந்த நான்கு பிரபந்தங்களிலும் அடங்கிய பாசுரங்கள்,

பெரிய திருமொழி 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருவெழுக் கூற்றிருக்கை 1
1135

  1. தே.பி. 379.
  2. தே.பி 382