பக்கம்:வைணமும் தமிழும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

55



என்று ஆகின்றன. எனவே, இரு மடல்களும் 1253-1135=118 பாசுரங்களாகின்றன என்பது இதனாலும் தெளிவாகின்றது. தேசிகர் 'சிறியதிருமடல் முப்பத்தெட்டு இரண்டும்', பெரிய மடற் 'பாட்டு எழுபத்தெட்டு' என்று குறித்த எண்ணிக்கையைப் பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். பாசுரத்தின் பொருட் போக்கைக் கொண்டு அங்கங்கே பாசுரங்களாக நிறுத்தியுள்ளனர்.[1] இப்பதிப்புகளில் பெரிய திருமடலை 78 பாசுரமாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். சிறிய திருமடல் 40 பாசுரமாகக் கொள்வதால் நூலை 38 பாசுரங்களாகவும், பிற்சேர்க்கைப் பாடலை உதிரிப் பாசுரங்களாகவும் இவர்கள் கொள்கின்றனர். பிற்சேர்க்கைப் பாடலைச் சேர்த்துக் கொள்வது சிறிதும் பொருத்தமன்று. சில ஏட்டுப் படிகளில் சிறிய திருமடலை 38 பாசுரங்களாகவும் பெரிய திருமடலை 80 பாசுரங்களாகவும் பிரித்துள்ளனர். இம்முறையால் இரு மடல் பிரபந்தங்களும் 118 பாசுரங்கள் என்ற தொகை நிரம்பிவிடுகின்றது. தேசிகப் பிரபந்தத்தில் “சிறிய திருமடல் முப்பதெட்டு இரண்டும் பெரிய திருமடல் எழுபத்தெட்டும்” என்றிருப்பதைச் சிறிய திருமடல் முப்பத்தெட்டு இரண்டும் எழுபத்தெட்டு எனக் கூட்டிப் பெரிய திருமடலை எண்பது


  1. ஒரே பாடலாக அமைந்த நீண்ட பாசுரங்களைப் பொருள் முடிவு கருதித் தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுதல் பண்டிருந்து வரும் ஒரு மரபேயாகும். நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் இம்முறையை மேற் கொண்டுள்ளனர். இம் மரபையொட்டியே இருமடல் பிரபந்தங்களையும் பல பாசுரங்களால் (சரியாகச் சொன்னால் பல பகுதிகளாகக்) கணக்கிடும் மரபும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். பாசுரங்களைச் சேவிக்கும் போது இப் பகுதிகளின் இறுதியில் சற்று நிறுத்தப் பெறுகின்றது.