பக்கம்:வைணமும் தமிழும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமொழிகள் மட்டுமே இருந்தால் அதை ஒரு பத்தாகக் கணக்கிட முடியாது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் பெரியாழ்வார் திருமொழியில் “சீதக்கடலுள்” என்று தொடங்கும் (இரண்டாம்) திருமொழியில் இருபது பாசுரங்கள் அமைந்துள்ளபடியால், மொத்தத்தில் முதல் பத்தில் ஒன்பது திருமொழிகள் அமைந்திருந்தாலும் நூறுபாசுரங்கள் இடம் பெற்றுவிடுகின்றபடியால் அதை ஒரு பத்தாகக் கொள்ளக் குறையேதுமில்லை. மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தினமாலையில் வேதத்திற்கு ஒம் என்பதுபோல் திவ்வியப் பிரபந்தங்களுக்குத் திருப்பல்லாண்டு என்பது தனியொரு பிரபந்தம் எனக் கொள்ள முடியாது என்று ஆசிரியர் கூறுகிறார். திருப்பல்லாண்டு என்பது பெரியாழ்வார் திருமொழியின் முதல் பதிகமாக இருக்குமானால் அதற்குத் தனியாகத் ‘திருப்பல்லாண்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்காது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பற்பல பதிகங்களைக் கொண்ட எந்த திவ்வியப் பிரபந்தத்திலும் பதிகத்திற்குத் தனியான பெயர் வழங்குவதில்லை. முதல் பாசுரத்தின் முதல் சொல்லே பதிகத்தின் தலைப்பாகக் குறிப்பிடப்படும். உதாரணமாகப் பெரியதிருமொழியில் முதல் பதிகத்தில் நாராயணநாமத்தின் பெருமை கூறப்பட்டாலும் அப் பதிகத்திற்குத் தனிப்பெயர் வழங்குவதில்லை. “வாடினேன் வாடி” என்றே அப்பதிகம் குறிப்பிடப்பெறும். இதே போல் மற்ற பிரபந்தங்களிலும் காணலாம். அப்படியிருக்கும்போது திருப்பல்லாண்டு தனி பிரபந்தம் அல்ல என்றால் அதுவும் “பல்லாண்டு பல்லாண்டு” என்று குறிப்பிடப்பட்டிருக்குமேயன்றி “திருப்பல்லாண்டு என்ற தனிப்பெயரால் குறிப்பிடப்பட்டிருக்க முடியாது. மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தினமாலையில்

vi