பக்கம்:வைணமும் தமிழும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வைணவமும் தமிழும்



யன்றிப் பரகால நாயகியினுடையவை அல்ல. இங்ஙனமே கண்ணனோடு ஊடி உரைத்தல் (108) என்ற திருமொழி மகள் பாசுரம் போல காணப்படினும் அதுவும் பரகால நாயகியின் பாசுரம் அல்ல.

2. தத்துவம் :

இங்கனம் மூன்று வகையாகச்சொல்லும் பாசுரங்கட்குத் திருமந்திரத்தின் அடிப்படையில் தத்துவம் கூறி விளக்கமும் அளித்துள்ளனர் நம் முன்னோர்கள் ஆசாரியப் பெருமக்கள். 'ஒம் நமோ நாராயணாய' என்பது திருமந்திரம். இதிலுள்ள ஒம்+நமோ+நாராயணாய என்ற மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் செப்புகின்றன. அவை; 'சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம்' என்பன.[1] மற்றும் ஒம் என்னும் பிரணவம் பிரிந்திருக்கும் நிலையில் அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளைக் கொண்டது. இந்த மூன்று எழுத்துகளும் மூன்று பதங்களாய் நின்று மூன்று பொருள்களைத்தெரிவிக்கும். அதாவது அகாரம் பகவானையும் அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கிநிற்கும் நான்காம்வேற்றுமை (லுப்த சதுர்த்தி) அடிமைத் தன்மையையும், உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யார் ஹத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தலையும்) மகாரம் ஞானவானாகிய சீவான்மாவையும் தெரிவிக்கின்றன. திருவெட்டெழுத்து மந்திரத்தின் மூன்று சொற்களாலும் குறிப்பிடப்பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை


  1. ஆசா- ஹிரு 118 (புருடோத்தம நாயுடு பதிப்பு) சேஷத்துவம் பிறருக்கு அடிமையாயிருத்தல்; பாரதந்திரியம்-பரன் அல்லது பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் கைங்கரியம்-அடிமைத் தொழில்.