பக்கம்:வைணமும் தமிழும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

69



இதில் ‘இவளுக்கு இத்துன்பம் எவ்வளவாய் முடியக் கூடியது என்று அறிகிலேன்’ என்கின்றாள். இப்பாசுரத்தை ஊன்றித் திரும்பத் திரும்பப் படித்தால் தாய்ப்பாசுரத்தின் தத்துவம் தட்டுப்படும்.

(3) மகள் பாசுரங்கள் : பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவனுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து தலைவனுடைய ஒப்பற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள்; குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் என்னும் பதற்றத்தை உடையவள் இவள். காலக் கழிவையும் இவளால் சிறிதேனும் பொறுக்க முடியவில்லை. பிரணவத்தினாலும், நமஸ்ஸாலும் எல்லோருக்கும் சேவியாய் (தலைவனாய்), சரண்யனாய் அறுதியிடப் பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் இவனே. பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் இவை உணரப்பெற்ற பின்பு 'நாராயணாய' என்ற சொல்லால் கூறப் பெற்றுள்ள சொரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றின்[1] சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்பவன் இவன். எம் பெருமான் சாத்தியோபாயமாக[2] இருந்தால் தான்செய்யும் சாதனங்கள் முடிவுற்றபிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக்கூடுமென்று பொறுத்திருக்கலாம். ஆனால்


  1. சொரூபம்- தியானத்திற்குரிய ஈசுவரனின் சொரூபம்; ரூபம்பகவானுடைய திருமேனி, குணம்-ஆன்ம குணம். திருமேனியின் குணம். ஆன்ம குணம்-ஞானம் சக்தி முதலியன; திருமேனி குணம் - அழகு மென்மை முதலியன. விபூதி- நியமிக்கப்பெறும் பொருள் (ஐகவரியம்)
  2. சாத்தியோபாயம்- மக்களால் சாதித்துக் கொள்ளுகின்ற உபாயம். எ.டு பக்தி, பிரயத்தி