பக்கம்:வைணமும் தமிழும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வைணவமும் தமிழும்


இப்படியான பின்பு தரிக்கும் வகை என்னோ?!" என்கின்றாள். இந்தப் பாசுரத்தில் தலைவியின் துடிப்பையும், பதற்றத்தையும் காணமுடிகின்ற தல்லவா?

(4) பகவத்விஷயகாமம் : வேதாந்தகளில் குறிப்பிடப்பெறும் பக்தி இங்ஙனம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்றலை அறிய முடிகின்றது. இவர்கள் எம்பெருமான்மீதுகொள்ளும் காமம் பகவத்விஷயகாமம் என்று வழங்கப்பெறும். இவர்கள் மாதவன் மீது கொள்ளும் காமம் மற்றவர்கள் மங்கையர்மீது கொள்ளும் காமத்தினின்றும் வேறுபட்டது. ஆயினும் சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் பேரின்ப அநுபவமாகிய இந்த பகவத் விஷயகாமத்திற்கும் கூறப்பெறும். சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாக இருப்பவை போல் பகவத் விஷயாதுபவத்திற்கும் பரபக்தி[1], பரஞானம்[2], பரமபக்தி[3], என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களின் வாயிலாக அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று சமயச் சான்றோர்கள் கொள்வர்.

காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் கவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ஙனமிருக்க காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள். அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன ? உடல்


  1. பரபக்தி-எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆவல்.
  2. பரஞானம்- எம்பெருமானை நேரில் காணல்.
  3. பரமபக்தி-எம்பெருமானை மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல்.