பக்கம்:வைணமும் தமிழும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

75


ஆகியோர்.[1]'"நாதமுனிவர், லோக சாரங்க முனிவரால் தாங்கப்பெற்ற திருப்பாணாழ்வார், தம்பிரான்மார்(அரையர்)” போன்றவர்கள் தும்பி என்றும், வண்டு என்றும் பேசப் பெறுவர்.[2] அதே நூல் கிளி, பூவை, குயில், மயில் என்பவற்றிற்கு உள்ளுறைப் பொருளாக அமைபவர்கள் மதுரகவிகள், தொண்டரடிப் பொடியாழ்வார். கூரத்தாழ்வான், திருமாலையாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் முதலியோர்களைக் கூறும்[3] நாரை, கொக்கு, குருகு என்னும் பறவைகட்குக் “குலசேகரப் பெருமாள் ஆசாரிய பதத்தில் நின்றவர்களான முதலிகள் போல்வார்" உள்ளுறைப் பொருள்களாக அமைவர்[4] மேகத்திற்கு உள்ளுறையாக “திருமழிசைப் பிரான், திருமங்கையாழ்வார், இராமாநுசர்" முதலியோர் பேசப் பெறுவர்.[5]

(6) துதுப்பதிகங்கள்:மயர்வறமதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தூது விடும் பதிகங்கள் ‘அஞ்சிறையமடநாராய்’ (1,4), 'வைகல் பூங்கழிவாய்’ (6,1),'பொன்னுலகாளிரோ?' (6,8), 'எம்கானல் அங் கழிவாய்’ (9,7) என்ற நான்காகும். இவை முறையே வியூகத்திலும், விபவத்திலும், பரத்துவ, அந்தர்யாமித்துவத்திலும், அர்ச்சையிலும் தூதுவிடும் பதிகங்களாக அமைகின்றன என்று ஆசாரியர்கள் அறுதியிட்டுள்ளனர்.


  1. ஆசா-ஹிரு சூத் 151 உரையில் விளக்கம் தரப்பெற்றுள்ளது.
  2. மேலது 152 (விளக்கம்) உரையில் காண்க.
  3. மேலது 153 (விளக்கம்) உரையில் காண்க.
  4. மேலது 154 (விளக்கம்) உரையில் காண்க
  5. மேலது 155 (விளக்கம்) உரையில் காண்க.