பக்கம்:வைணமும் தமிழும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வைணவமும் தமிழும்


நிலமன்றோ? நீர் நிலத்தருகே இராநின்ற ஆழ்வார் நாயகி அண்மையிலிருக்கும் நாரையைப் பார்த்து “நாராய் நீ என் நிலைமையைக் கருடக் கொடியானுக்கு அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்” என்று இரக்கின்றாள்.

அஞ்சிறைய மட நாராய்!
அளியத்தாய்! நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய்
ஆ வா! என்று எனக்கருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு
என்விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில்
வைப்புண்டால் என்செய்யுமே? (1.4:1)

(மடம் - இளமை; புள் கருடன் (141)வைப்புண்டால் - அநுபவித்திருப்பாயானால்)

என்பது பாசுரம். குழந்தை தாயினுடைய எல்லா உறுப்புகளையும்விட்டு முலையிலே வாய் வைப்பதுபோல், இங்கு நாரையின் மற்றைய உறுப்புகளை விட்டு அதன் சிறகிலே கண்வைப்பது விரைந்து செல்வதற்கு அதுவே சாதனம் என்பது பற்றி சொன்ன சொல்மறுக்காமல் உடனே தயாராக இருப்பது போல ஆழ்வார்கண்ணுக்குத் தோற்றியதால் ‘மட’ என்ற அடை மொழியால் சிறப்பித்தார். நாயகன் விடுகின்ற தூதைக் காட்டிலும் நாயகி விடுகின்றதுதுக்கு ஏற்றமுண்டு. இராமனால் தூது விடப்பெற்ற சிறிய திருவடிக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பிராட்டியின் தூதனாக அவன் இராமனிடம் மீண்டுவந்த போது அவனுடைய திருமார்பிலே அணைக்கப் பெற்றான். நாரையின் உள்ளும் புறமும் வெண்மையாக