பக்கம்:வைணமும் தமிழும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

79


இருப்பதுபோல் ஆசாரியர்களும் தூய்மை வாய்ந்த மனம் மெய்களையுடையவர்கள் என்பது நாரையின் உள்ளுறைப் பொருள்.

நாரையைத் தூது போகுமாறு இரந்த தலைவி அங்குச் சென்றால் சொல்ல வேண்டிய செய்திகளைச் சில குயில்கட்குக் கூறுகின்றாள். ஒருவரை அழைத்துவிட்டு மற்றொருவருக்குச் செய்தி சொல்லுகின்ற போக்கிலிருந்து ஆழ்வார் நாயகியின் மிகுதியான கலக்கம் நன்கு புலனாகும். இத்தகைய கலக்கத்தை உண்டு பண்ணியது விஷயாந்தரங்களை விட பகவத் விஷயத்தில் உண்டான ஏற்றம். இனக் குயில்கட்கு ஆழ்வார் நாயகி கூறும் செய்தி,

முன்செய்த முழுவினையால்
திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன்
அகல்வதுவோ? விதியினமே. (2)

[முன்- எனக்குத் தெரியாதகாலம் முதலாக; வினை - பெரும் பாவம்; குற்றேவல் - அடிமைத் தொழில்]

என்பது. “அநாதி காலமாகத் திரட்டின பாவத்தாலே திருவடி வாரத்திலே அந்தரங்க கைங்கரியம் பண்ணுவதற்கு ஏற்கெனவே முயலப் பெறாத நான் அகன்று போக வேண்டியது தானோ? என்று கேளுங்கள்” என்கின்றாள்.

முழுவினை: இதனை விளக்கும் போக்கில் நம்பிள்ளை காட்டும் ஐதிகம்[1] பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருந்த காலத்து அங்குத் தெற்காழ்வான் என்றும் கோளரி


  1. ஐதிகம்-என்பது சம்பிரதாய அடியாக வந்த ஒரு வார்த்தை, அதாவது முன் நடந்ததைத் தெரிவிப்பது.