பக்கம்:வைணமும் தமிழும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வைணவமும் தமிழும்


யாழ்வான் என்றும் பெயர்களைக் கொண்ட இருவர் வாழ்கின்றனர். கோளரியாழ்வான் நற்குண நல்லொழுக்கமுடையவன்; தெற்காழ்வான் சாதாரணமாகக் காணப்பெறும் ஒரு சராசரி மனிதன். இருவரும் சிறப்பான ஒரு திதியன்று ஒரு குளக்கரையில் சந்திக்கின்றனர். கோளரியாழ்வான் தெற்காழ்வானை நோக்கி "அப்பா,இது புண்ணியதினமாயிற்றே. இன்றாகிலும் ஒரு முழுக்கிடமாட்டாயா?” என்கின்றான். அது கேட்ட தெற்காழ்வான் “முழுக்கிடவேணுமென விதிக்கின்ற உன் அபிப்ராயம் என்னுடைய பாவங்கள் இந்த முழுக்கினால் தொலையக்கூடும் என்பது தானே; அந்தோ! என்னுடைய பாவம் திருக்கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாளுடைய திருக்கையிலுள்ள திருவாழியால் போக்கினால் போகுமேயல்லது ஒன்றிரண்டு முழுக்கால் போகக் கூடியதன்று காண்” என்கின்றான். இச்சொற்கள் பட்டருடைய திருச்செவியில் விழுந்த அளவில் “ஆ! ஆ! எவ்வளவு ஆத்திகனாயிருந்தால் இந்த வார்த்தை சொல்ல முடியும்? இவனை மேலெழுந்தவாரியாகப் பார்த்து நாத்திகன் என்று நினைத்திருந்தோமே இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன்” என்று மிகவும் ஈடுபட்டதாக வரலாறு.

நாயகி நிலையிலிருக்கும் ஆழ்வார் "கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” (நாச் திரு 13:9) என்ற ஆண்டாளைப் போல் "முலையால் அணைக்க” என்று சொல்ல வேண்டியிருந்தும், “திருவடிக்கீழ்க் குற்றேவல்” என்று சொல்லுகின்ற அழகு அற்புதம், இங்கே நம்பிள்ளை ஈடு; “பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமாப் போலே, இவர் பிராட்டியானாலும் முலையால் அணைக்க நினையார்;