பக்கம்:வைணமும் தமிழும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

81


திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை” என்பதாக, வேதமோதிய அந்தணனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் வேதாத்யயனமே சொல்லித் திரிதல்போல, ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லை என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

பராங்குச நாயகியின் கண்வட்டத்தில் பேடையோடு களித்திருக்கும் அன்னங்கள் தென்படுகின்றன. அவற்றை நோக்கித் தூது செல்ல வேண்டிய இடத்தையும், தூதுச் செய்தியையும் குறிப்பிடுகின்றாள்.

விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள்மாணாய்
உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே
மாளாதோ என்றொருத்தி
மதியெல்லாம் உள்கலங்கி
மயங்குமால் என்னீரே (3)

[விதி-பாக்கியம் ; குறள் மாணாய்- வாமன பிரம்மச்சாரியாய்; கள்வர் - வஞ்சகர்; மயங்கும்- அறிவிழந்து கிடக்கும்)

என்ற பாசுரத்தில் 'விதி' என்பதற்குச் 'சாத்திரவிதி' என்றும் 'பாக்கியம்-பேறு' என்று இரண்டுவிதமாகப் பொருளுரைப்பர். பின்னதே சிறந்தது. இதனையொட்டி நம்பிள்ளை ஈடு: “பெருமாள் பிராட்டியாரைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே இராஜ்யதாரங்களை