பக்கம்:வைணவ உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வைணவ உரைவளம் அநுபவிப்பதற்காகப் பலபல திவ்விய மங்கள விக்கிரகங் களை ஏற்றுத் திவ்விய தேசங்கள் தோறும் சந்நிதி பண்ணி யிருக்கின்றானாகையாலே ஆழ்வார் எங்கும் புகுந்து மங்களாசாசனம் செய்ய விரும்பி சாளக் கிராமத்திற்குச் செல்லுகின்றார். "செளபரி போகத்துக்கு உறுப்பாக அநேக வடிவங் கொண்டாற்போலே ஆச்ரிதரை அநுபவிக்கைக்கு உறுப்பாக உகந்தருளின நிலங்களெங்கும் புகுந்து சந்நிதி பண்ணி னாயிற்று அவன்; இனி இவர் தாமும் தானிருந்த ஊரெல்லாம் தன் தாள்பாடி எங்கும் புக்கு அநுபவிக்கை யிலே யாய்த்து அபேட்சை பண்ணியிருப்பது' என்று. வியாக்கியான சூத்தியையும் இங்கே அது சந்திப்பது. 26 சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து புலம்படித் துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளர; அலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க் காசனே வானோர் கலம்புரிந் திறைஞ்சும் திருவடி அடைந்தேன நைமிசா ரணியத்து எந்தாய்!" (சிலம்பு அடி-சிலம்புகளை அணிந்த கால்கள்; அறம்-தருமம்; புலன் - இந்திரியங்கள்: வாளா-வீணாக; அலம்-கலப்பை; வானோர் -நித்திய சூரிகள்) நைமிசாரணியத்தின்மீது மங்களாசாசனம் செய்த திருமொழியில் ஒரு பாசுரம். கலப்பையைத் தரித்த 3. பெரி. திரு. 1.6;2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/105&oldid=920705" இலிருந்து மீள்விக்கப்பட்டது