பக்கம்:வைணவ உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 8 | திருக்கையுடையவனே! ஆச்சரியமான செயல்களையுடைய வனே! தேவாதி தேவனே! நைமிசாரணியத்து எந்தாய்! சிலம்பை அணிந்த அழகிய கால்களையுடையவர்களும் குறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மகளிர் வசப்பட்டு அறத்தையே மறந்து புலன்களால் பெறும் இன்பத்தை மேன்மேலும் பெருக்கிக் கொண்டு வாழ் நாளை வீணாகக் கழித்துக் கெடடேன். நித்திய சூரிகள் அன்பு பூண்டு ஆச்ரயிக்கப்பெற்ற நின திருவடிகளிலே இன்று வந்து கிட்டப் பெற்றேன்' என்கின்றார். அலம் புரிதடக்கைஆயனே!: பலராமனைக் குறித்தவாறு. ஹைலம்' என்ற வடசொல் அலம்' எனத் திரிந்து நின்று கலப்பையை உணர்த்துகின்றது. கலப்பையும் உலக்கை யும் பலராமனின் ஆயுதங்கள். இரண்டு வரலாறுகள் இதில் அடங்கிக் கிடக்கின்றன. முதல் வரலாறு : ஒரு காலத்தில் பலராமர் அருகில் ஒடு கின்ற யமுனை நதியை நோக்கி, ஒ யமுனையே! நீ இங்கே வா; நான் நீராட வேண்டும்" என்று அருளிச்செய்ய, அவ்வமுனை அவர் மதுபான மயக்கத்தால் இப்படிப் பேசு கின்றார் என்று அவர் சொற்களை அவமதித்து அங்கே வரவில்லை. இது கண்ட பலராமர் வெகுண்டு தமது கலப்பையைக் கையிலெடுத்து அதன் துனியாலே அந் நதியைப்பற்றி இழுக்க அந்நதி தான்போகுவழியைவிட்டு அவர் எழுந்தருளியிருக்கும்வனத்தில் பெருகியது; அத்துடன் தன்னுடைய அழகியமேனியுடன் அவரெதிரில்வந்து அச்சத் தினால் மிகவும் நடுநடுங்கிச் சிறப்பாக வேண்டிக் கொள்ள, பலராமரும் அதனை மன்னித்து அதில் நீராடினார். இரண்டாவது வரலாறு: ஒரு சமயம் துரியோதன் அத்தின புரத்தில் தன் மகள் இலக்கணைக்குச் சுயம்வரம் கோடித் தான். கண்ணனின் தேவியரில் ஒருத்தியாகிய சாம்பவதி யின் திருக்குமாரனான சாம்பன் அவளை வலிந்து தூக்கிக் Oسه له (65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/106&oldid=920706" இலிருந்து மீள்விக்கப்பட்டது