பக்கம்:வைணவ உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வைணவ உரைவளம் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும்; செதுக்கையிட்டுப் புகைக்கலாம்; கண்ட காலிப் பூவும் சூட்டலாம்' என்று கூறினாராம். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கஞ்சீயர் கண்ட காலிப் பூவை எம்பெருமானுக்குச் சாத்தலாகாது’ என்று சாத்திர மறுத் திருக்க:இப்படி அருளிச் செய்யலாமோ?" என்று கேட்டராம். அதற்கு மறுமொழியாக சாத்திரம் மறுத்தது மெய்தான்; கண்ட காலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுக்க வில்லை; அடியார்கள் அப் பூவைப் பறித்தால் கையில் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கல் தயையினால் சாத்திரம் நீக்கினதேயன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவு மில்லை' என்றாராம். திருவாய் மொழிக்குப்பதினெண்ணாயிரப்படி அருளிய பரகால சுவாமி இந்தச் சம்வாதத்தைக் கண்டு ரசிக்காமல் மறுத்துரைத்ததுபற்றிக் கவலை கொள்ள வேண்டா. பக்தி வரம்பு கடந்தால் நூல் வரம்பில்லை’ என்றதையும் அருளிச் செயல் தொடையழகையும் நோக்கி ரசப்பொருள் உரைப்பதில் அறிவுடையார்க்குப் பணியன்று என்பதை, நாம் உணர்ந்தால் போதும். 28 முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்துஅரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து, அவனே பின்னோர் தூது ஆகிமன்னர்க் காகிப் பெருகிலத்தார் இன்னார் தூதன் எனகின்றான் எவ்வுள் கிடந்தானே.” 2. பெரி. திரு. 2.2:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/109&oldid=920709" இலிருந்து மீள்விக்கப்பட்டது