பக்கம்:வைணவ உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 87 திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்த திரு மொழியில் உள்ள பாசுரம். :வேத சொரூப மாணவனும் உபாயங்களையும் பலன்களையும் வேதம் மூலமாகக் காட்டிக் கொடுத்தவனும் முனிவர்களுக்கு இனிய கனி போன்றிருப்பவனும், நந்தன் திருமாளிகையில் யானைக் கன்றுபோல் விளையாடியவனும், குவலயத்தோர் தொழு தேத்தும் ஜகத்காரணபூதனும், அமுதம் போன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான எம்பெருமானைத் திருவல்லிக்கேணியில் சேவிக்கப்பெற்றேன்' என்கின்றார். நந்தனார் களிறு: நந்தகோபனுடைய திருமாளிகை யில் யானைக் கன்றுபோல் விளையாடினவன். யானை யானது ஒருநாள் கண்டோமென்று திருப்தியாயிருக்க வொண்ணாதபடி நாடோறும் காணவேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்குவதும், மிக்கசெருக்கையுடையதும், கைக்கு எட்டினாரை நினைத்தபோது எடுத்துக் கழுத்திலே வைத்துக் கொள்வதும், தன்மீது ஏற நினைப்பார்க்குத் தன்னைப் பணிந்துகொடுப்பதும், உதவாதாரை ஆராயாது கிழித்துப் போடுவதும், தன்னைக் கட்டுமாறு தானே கயிற்றை எடுத்துக் கொடுப்பதுமாக இருக்கும்; அவ்வாறே நாடோறும் சேவிக்கத் தக்க வடிவழகும், எப்பொழுதும் இறைவனாயிருக்கும் தன்மை தோன்றக் கொண்டிருக்கும் செருக்கும், நித்திய சம்சாரியொருவன் தன்னைச் சரண மனடந்ததே காரணமாக அவனது குற்றங்களைக் குற்றங்களாகக் கொண்டு தன்னை அவனுக்குக் கொடுத் தால் கேட்பாரில்லாத உரிமையும், கருமம் ஞானம் முதலிய உபாயங்களால் தன்னையடைய விரும்பினவர்க்கும் தன்னைக் கொடுக்கும் சீலமும், தனது அடியார்களின் விரோதிகளை ஆராயாது அழிக்கின்ற விரோதி நிரச சுபாவமும், தன்னைக் கட்டுப்படுத்துமாறு பக்தியைத் தானே தருதின்ற ஆவலை உண்டாக்கும் தன்மையும் உடையவன் எம்பெருமான். ஆதலால் களிறு அவனுகுக் முற்றுவமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/112&oldid=920713" இலிருந்து மீள்விக்கப்பட்டது