பக்கம்:வைணவ உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 89. காண்டவவனம் எரித்த வரலாறு: இஃது இந்திரனுக்கு உரியதாய்ப் பூவுலகிலுள்ள காடு. ஒரு நாள் அக்கினி பகவான் அந்தண வேடம் பூண்டு அருச்சுனனும் கண்ணபிரானும் கூடியிருக்குமிடத்தில் வந்து சேர்ந்தான்; கிருஷ்ணார்ச்சுனர்கள் அவனை நன்கு உபசரித்தனர்; அவன் உணவு வேண்ட, வேண்டிய உணவை அளிப்போம்” என்று அவ்விருவரும் உறுதிமொழி கூற, உடனே அவ்வந்தனன் உண்மையில் இன்னானெனத் தெரிவித்துக் காண்டவவனத் தைத் தனக்கு இரையாக அளிக்குமாறு வேண்ட, அவர் களும், பல கொடிய அரசர்களும் அரக்கர்களும் துஷ்ட மிருகங்களும் நிரம்பியிருக்கும் இந்தக் காடு அழிந்தொழிவது நன்றே" என்று நிச்சயித்து அக்கினி பகவானை நோக்கி அங்ங்னமே உண்பாயாக’ என்று அனுமதி தந்ததின் பேரில் அக்கினி அக்காடு முழுவதையும் சூழ்ந்து மனநிறைவு கொள்ளும் முறையில் உண்டனன் என்பது கதை; இது மகாபாரதத்தில் ஆதிபருவத்தில் விரித்துரைக்கப் பெற் றுள்ளது. மண்ணின் பாரம் நீங்குவதற்கே வடமதுரைப் பிறந்தவனான கண்ணபிரான் தனது அன்பனான இந்திரன் வருந்தும்படி அவனது காட்டையழிக்குமாறு அநுமதித்தது அவதாரப் பயன் நிறைவேறுவதற்காக என்க: அக்காட்டி லுள்ள அளவற்ற துட்ட மிருகங்ளின் கூட்டங்கள் தொலைந்தொழியும் முகத்தால் பூமியின் பாரத்தைக் குறைத்தருளினன் என்று உணர்க. (இந்த வரலாறு இந் நூல் பாசுரம்-33லிலும் குறிப்பிடப்பெறுகின்றது). 3 | புகரார் உரு வாகி முனிந்தவனைப் புகழ்விட முனிந்துயி ருண்டு அசுரன் நகராயின பாழ்பட நாமமெறிக் ததுவன்றியும் வென்றிகொள வாளவுணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/114&oldid=920715" இலிருந்து மீள்விக்கப்பட்டது