பக்கம்:வைணவ உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗2 வைணவ உரைவளம் திருக்கடல் மல்லையை அநுபவித்ததன் விளைவாக எழுந்த திருமொழியின் ஒரு பாசுரம். திருக்கடல் மல்லைப் பெருமான் எப்படிப்பட்டவன்? உலகங்களை யெல்லாம் பிரளயத்திலே எடுத்துத் தன் திருவயிற்றிலே வைத்து அவை உள்ளே கிடந்து தளராதபடி பிறகு வெளிநாடு காண உமிழ்ந்தவன்; பவளத்துணைப் போன்றவன்; கடலில் நின்றும் கிளர்ந்த தேவபோக்கியமான அமுதம் போன்ற வன்: கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்லக் கறுக் கொண்ட கம்சனால் ஏவப்பட்டுக் குதிரை வடிவங் கொண்டு வந்த கேசி என்னும் அசுரனுடைய வாயைக் கீண்டெறிந்து அவனை முடித்த வீரலட்சுமி பொருந்தியவன்; இப்படிப்பட்ட திவ்விய சேஷ்டிதத்தைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவன்; பக்தர்களின் சிந்தையாகின்ற தோட்டத்தில் முளைத்து அவ்விடத்தி லேயே அபிவிருத்தி யடைகின்ற மதுரமான கரும்பு போலிருப்பவன்; வில்விழா என்ற வியாஜத்தினால் கம்சனால் அழைக்கப்பட்டு அவனுடைய அரண்மனையி லுட்புகும்போது தன்னைக் கொல்லுமாறு நிறுத்தப்பட்டுக் கறுக்கொண்டெதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் மதயானையின் கொம்பினைப் பறித்தெறிந்து அதனை முடித்த வீரன்; வெண்ணெய் களவு செய்ததற்காக யசோதையினால் உரலோடு பிணைக்கப்பட்டு அதனையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து சென்றபோது அசுராவேசம் பெற்று வழியிடையே நின்ற இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன்; பொன்மலைபோல் பளபளவென்று ஒளிவிடுபவன்; முதலையின் வாயில் அகப்பட்டுத் துடித்த கசேந்திராழ்வானுடைய துயரத்தைத் தொலைத்து அவள் கையில் செந்தாமரைப் பூவைத் தனது திருவடிகளில் இடு வித்துக் கொண்டவன்; கற்பகத் தருவைப்போல் விரும்பிய வற்றை யெல்லாம் வழங்கும் வள்ளல்; இப்படிப்பட்ட எம்பெருமானை அடியேன் திருக்கடல் மல்லையில் சேவிக்கப் பெற்றேன்' என்கின்றார் ஆழ்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/117&oldid=920718" இலிருந்து மீள்விக்கப்பட்டது