பக்கம்:வைணவ உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வைணவ உரைவளம் வேண்டும். அக் கடல் நீரைக் கையால் இறைத்து வற்ற அடிக்க முயல்கின்றார் முனிவர். செயல் துரிதமாக நடை பெறுகின்றது. பரந்தாமன் பக்தனின் அன்பு மிகுதியைக் கண்டு வியந்து உவந்து ஒரு முதியவர் வடிவத்தில் அவர் முன்னே வந்து தனக்குச் சிறிது உணவும் நீரும் கூலியாகத் தரின் தான் துணை செய்வதாகக் கூறுகின்றார். புண்டரீகர் அதற்கிசைந்து உணவு கொணர்வதற்கு ஊருக்குள் செல் கின்றார். திரும்பி வந்து பார்க்கும்போது வயோதிகர் கூராழி வெண்சங்கேந்திய கோலத்துடன் தரையில் படுத்துக் கிடக்கின்றார். கடல் நீரும் வற்றியுள்ளது. எறிகடலுக்கும் வழி திறக்கப்பெற்றுள்ளது. புண்டரீகருக்குச் சேவை சாதிபபதற்காகவே பரந்தாமன் இந்தக் கோலத்தில் எழுந் தருளி யிருந்தான. அம் முனிவரின் வேண்டுகோளின்படி அவர் உகந்த தலசயனனாகவே என்றும் நிலையாக மக்களுக்குச் சேவை சாதித்து வருகின்றான் என்பது ஐதிகம். 33 பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றும் ஒதி மாண்டு,அவத்தம் போகாதே வம்மின் எங்தை என்வணங்கப் படுவானை, கணங்க ளேததும் நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை கின்றஓர் கித்திலத்தைத் தொத்தார் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித் தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே." (அவத்தம்-கெடுக்கவல்ல காரியங்கள்; பூண்டு ஏறிட்டுக்கொண்டு; பிறர்க்கு-நீசர்களை: அடைந்து - ஆச்ரயித்து; தொண்டுபட்டுஅடிமை செய்து, பொய் நூலை-புறச் சமய 9. பெரு. திரு. 2. 5. 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/119&oldid=920720" இலிருந்து மீள்விக்கப்பட்டது