பக்கம்:வைணவ உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv அறுகுபோல் வேரூன்றிவிட்டது. கல்லூரியில் பயின்ற போதே மாணவநிலையில் கண்டு பேசி இருக்கின்றேன். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிப் படி அப்பொழுதே நினைத்தேன்-புலமையில், பழகும் பான்மையில், அறிவுத் திறமையில், அயரா உழைப்பில் நிகரற்று விளங்குவார் என்று. இன்று அவர்களிடத்தில் இவற்றையெல்லாம் கண்கூடாகக் காண்கின்றேன். இத்தகைய பேறு வாய்த்தது, ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து' (குறள்-398) என்ற தமிழ் மறையைப் பின்பற்றியதா? இறைவன் திருவருளினாலா? என்றால்:இரண்டையும் ஏற்றுக்கொள்ள லாம். எனினும், பேராசிரியர் அவர்களின் உழைப்பு அசாதாரணம் ஆனது. திருச்சி தமிழ்ச் சங்கத்தில் (சனவரி 1983) இவர் எழுதிய முத்திநெறி' என்ற நூல் வெளி யீட்டு விழாவில் அடியேன் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது சொன்னேன், இவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள்பற்றி. இவ்வளவு நூல்களையும் சிந்தித்து, பிழை நேராதவாறு எழுதிவிட இவர்களால் எப்படி முடிந்தது? குடும்பச் சுமை ஒரு புறம்; ஊதியத்திற்கு உழைக்கும் தொழில் தொல்லை மற்றொரு புறம். இந்த நிலையில் அறிஞர்கள் மூக்கில் விரல் வைத்து வியக்கும் வண்ணம் புலமை நிறைந்த கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்; வெளியிட்டும் வருகின்றார்கள். ஒருக்கால் * இன் கவி பாடும் பரமகவிகளால் தன் கவி தான்தன்னைப் பாடுவியாது, இன்று-நன்கு வந்து என்னுடன் ஆக்கி, என்னால் தன்னை வன்கவி பாடும் வைகுந்த நாதனே' (திருவாய் 7.9:6) என்ற ஆழ்வார் பாசுரப்படி வேங்கட நாதனே இவர் நெஞ்சுள் நின்று அருள் பாலித்து வர வேண்டும்' என்று கூறினேன். அதைத் தான் வைணவ உரைவளம்" என்னும் இவ்வரிய பெரிய நூலைக் கண்டதும் நினைவுகூரச் செய்கின்றது. சொல்லுக்கு எட்டாதது இறைவன் செயல் என்பார்கள். இவர் ஆற்றிய, ஆற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/12&oldid=1528132" இலிருந்து மீள்விக்கப்பட்டது